கொரோனா விடுமுறையில் பிரம்மாண்ட இயக்குனரின் பிரமாத செயல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கொரோனா விடுமுறையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் விதவிதமான வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் இடையே தற்போது #BetheREALMAN என்ற சேலஞ்ச் பரவி வருகிறது. இதன்படி வீட்டு வேலைகளை பெண்களுக்கு உதவும்படி செய்து வீடியோ எடுத்து பதிவு செய்வதுதான் இந்த சேலஞ்ச். சமீபத்தில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வீடு சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டு அவர் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்களுக்கு இந்த சேலஞ்சை பார்வேர்டு செய்தார். இந்த சேலஞ்சை ஏற்று கொண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தன்னுடைய வீட்டை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய டாஸ்க்கை முடித்துவிட்டதாக இயக்குனர் சந்தீப் ரெட்டிக்கு பதிலளித்த எஸ்.எஸ்.ராஜமெளலி, இந்த டாஸ்க்கை தனது ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர்களுக்கு ஃபார்வேர்டு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சோபு அவர்களுக்கும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி அவர்களுக்கும் இந்த சேலஞ்சை அவர் ஃபார்வேர்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Task done, @imvangasandeep. Throwing the challenge to @tarak9999 and @AlwaysRamCharan..
— rajamouli ss (@ssrajamouli) April 20, 2020
And lets have some moooreee fun..
Am also challenging @Shobu_ garu, sukku @aryasukku and peddanna @mmkeeravaani..???? #BetheREALMAN pic.twitter.com/DepkfDvzIE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments