எஸ்.எஸ்.ராஜமெளலி வாங்கிய சொகுசுக்கார்: விலை இவ்வளவு தானா?

’பாகுபலி’, ’பாகுபலி 2’ மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி சொகுசு கார் ஒன்றை வாங்கி இருப்பதாகவும் ஆனால் அந்த காரின் விலை மிகவும் குறைவுதான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும், அவருடைய முந்தைய படமான ’பாகுபலி 2’ திரைப்படமும் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

‘பாகுபலி 2’ மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சேர்த்து நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். Volvo XC40 SUV என்ற மாடல் காரை எஸ்.எஸ்.ராஜமெளலி வாங்கியுள்ளதாக அந்த காரின் நிறுவனமே தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது

மேலும் இந்த காரின் விலை வெறும் 52 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில கோடிகள் மட்டுமே சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் பல கோடிகளில் சொகுசு கார்களை வாங்கி வரும் நிலையில் ஒரு படத்திற்கு 100 கோடிக்கும் அதிகமாக எஸ்.எஸ்.ராஜமெளலி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் அவர் மிகவும் எளிமையாக 52 லட்ச ரூபாய்க்கு மட்டுமே சொகுசுக்கார் வாங்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ஊடகங்களில் ஆச்சரியமான செய்தியாக வைரலாகி வருகிறது.