close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் குடும்பத்தில் இருந்து வரும் இன்னொரு இயக்குனர்

Thursday, November 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி உலகப்புகழ் பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது 'பாகுபலி' சீனா, ஜப்பான் உள்பட பல நாட்டு மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அவர்கள் திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர் என்பதும் தெரிந்ததே. இளையதளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கு இவர்தான் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு இயக்குனர் உருவாகியுள்ளார். அவர்தான் ராஜமெளலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி. இவர் 'காட்சி நேரம்' என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை ராமா ரீல்ஸ்` பட நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு பூபதி.கே ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசை அமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment