அடுத்த 1000 கோடி ரூபாய் வசூல் படம்.. ராஜமௌலியின் அடுத்த பட அறிவிப்பு தினம் இதுதான்..!

  • IndiaGlitz, [Monday,June 12 2023]

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்கள் சர்வ சாதாரணமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அவருடைய அடுத்த 1000 கோடி ரூபாய் வசூல் படம் என்று எதிர்பார்க்கப்படும் மகேஷ்பாபுவின் 29 ஆவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 9ஆம் தேதி அவரது பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’இந்தியானா ஜோன்ஸ்’ படத்தின் பாணியில் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் அட்வென்சர் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் ஏராளமான மிருகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் திரைக்கதையை அமைக்கும் பணி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் மகேஷ் பாபுவை தவிர இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து எந்தவிதமான முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அமீர் கான் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியும் உறுதிப்படுத்தாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் மற்றும் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராஜமெளலி-மகேஷ் பாபு திரைப்படம் நிச்சயம் இன்னொரு 1000 கோடி ரூபாய் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'மாவீரன்' படத்தின் செகண்ட் சிங்கிள்.. பாடும்போதே சண்டை போடும் பாடகர்கள்.. வைரல் வீடியோ..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்'  படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழுவினர் இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் இந்த பாடலை பாடிய

சூர்யாவின் அடுத்த இந்திப்படம்.. மகாபாரத கேரக்டர், 2 பாகங்கள்.. இன்னும் ஆச்சரிய தகவல்..!

ஏற்கனவே ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவான 'ரத்த சரித்திரா' என்ற ஹிந்தி திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் இந்த

எனக்கு மிகவும் பிடித்தமானவர்… இந்திய நடிகை குறித்து பேசிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல்!

ஹாலிவுட் நட்சத்திர நடிகரான வின் டீசல் இந்திய நடிகை ஒருவரை பாராட்டி பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

நடிகை குஷ்புவின் பியூட்டி சீக்ரெட்… இன்ஸ்டாகிராமில் அவரே பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் 80-90 களின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்து, வாழும் காலத்திலேயே கோவில் கட்டும் அளவிற்கு தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்

தென்னிந்திய நடிகை என்பதால் இதெல்லாம் நடந்தது? மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி!

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஹன்சிகா மோத்வானி