அர்ஜூன் மீது பிரபல நடிகை சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு!

  • IndiaGlitz, [Wednesday,December 01 2021]

ஆக்சன் கிங் அர்ஜுன் மீது பிரபல நடிகை ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அர்ஜுன் நடித்த ’நிபுணன்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அர்ஜுன் தன்னிடம் தகாத முறையில் நடந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்மீது அபாண்டமாக பழி சுமத்தியதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது அர்ஜுனனும் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி அர்ஜுன் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.


More News

மனைவியிடம் மறைத்த விஷ்ணு விஷால்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவாகிய விஷ்ணு விஷால் தனது மனைவியிடம் முக்கிய விஷயத்தை மறைத்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் எனக்கு பிச்சை போட்டிருக்காங்க: நிரூப்பிடம் அபிஷேக் ஆவேசம்!

மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்கிறார்கள் என்றும் அதனால் அவர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதற்காக நான் என்னை கொளுத்தி கொள்ளவும் தயங்க மாட்டேன் என்று நிரூப் இடம் அபிஷேக்

மாநாடு- 2  உருவாக்கப்படுமா? பதில் அளித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திரைக்கு வந்திருக்கும்

இயக்குநர் வசந்தின், “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்“ படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடந்த 26 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில்

கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? தனியார் மருத்துவமனை தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக வதந்தி கிளம்பியதை அடுத்து மக்கள் நீதி மய்யம் அதுகுறித்து விளக்கம் அளித்தது என்பது தெரிந்ததே.