அருவி படத்தின் பட்ஜெட்டே ரூ.2 கோடிதான், ஆனால் விபிஎஃப்-க்கு? எஸ்.ஆர்.பிரபு வேதனை

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் எதனால்? என்பது குறித்து நீண்ட விளக்கம் அளித்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவருடைய தயாரிப்பில் உருவான 'அருவி' படம் குறித்த ஒரு தகவலை அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தயாரித்த திரைப்படமான 'அருவி' ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சின்ன பட்ஜெட் படம் என்றும், ஆனால் அந்தபடத்தின் விபிஎஃப்- கட்டணமாக ரூ. 50 லட்சம் கியூப் நிறுவனம் பெற்றதாகவும் உண்மையில் அந்த படத்திற்கு ரூ. 15 லட்சம் மட்டுமே அந்நிறுவனம் பெற்ரிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு தங்கள் நிறுவனம் தயாரித்த 4 படங்களின் விபிஎஃப்- செலவு மட்டும் ரூ. 2.20 கோடி ஆனதாகவும், தாங்கள் உண்மையில் ரூ.1.50 அதிகமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள் அதிகமாகப் பெற்று வருவதைக் கண்டித்தும் சிறிய முதலீட்டுப் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்குத் தீர்வு காணும் விதமாகவும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

More News

பிரதமர் வருகையை புறக்கணிப்பதாக நடிகர்-எம்.எல்.ஏ அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று தமிழகம் வருகை தருகிறார் என்பதும், இன்று நடைபெறும் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார் என்பதும் தெரிந்ததே.

திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன் கமல் கையிலெடுக்கும் முக்கிய பிரச்சனை

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' 'என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஒரே கல்லில் பல மாங்காய்கள்: கமல்ஹாசனின் அதிரடி திட்டம்

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கி தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

இது எந்திரன் டைப் படமல்ல: ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்றவுடன் கோலிவுட்டில் பலர் ஆச்சரியப்பட்டனர்.

'காலா' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தனுஷ் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது டுவிட்டரில் பதிவு செய்தார்