அருவி படத்தின் பட்ஜெட்டே ரூ.2 கோடிதான், ஆனால் விபிஎஃப்-க்கு? எஸ்.ஆர்.பிரபு வேதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் எதனால்? என்பது குறித்து நீண்ட விளக்கம் அளித்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவருடைய தயாரிப்பில் உருவான 'அருவி' படம் குறித்த ஒரு தகவலை அவர் தற்போது தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தயாரித்த திரைப்படமான 'அருவி' ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சின்ன பட்ஜெட் படம் என்றும், ஆனால் அந்தபடத்தின் விபிஎஃப்- கட்டணமாக ரூ. 50 லட்சம் கியூப் நிறுவனம் பெற்றதாகவும் உண்மையில் அந்த படத்திற்கு ரூ. 15 லட்சம் மட்டுமே அந்நிறுவனம் பெற்ரிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு தங்கள் நிறுவனம் தயாரித்த 4 படங்களின் விபிஎஃப்- செலவு மட்டும் ரூ. 2.20 கோடி ஆனதாகவும், தாங்கள் உண்மையில் ரூ.1.50 அதிகமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள் அதிகமாகப் பெற்று வருவதைக் கண்டித்தும் சிறிய முதலீட்டுப் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்குத் தீர்வு காணும் விதமாகவும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout