நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன்: டுவிட்டர் பயனாளிக்கு பதிலடி கொடுத்த 'அருவி' தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Friday,January 19 2018]

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து இரண்டு விஜேக்கள் பேசிய விவகாரம் திரையுலகினர்களை கொதிப்படைய செய்துள்ளது. இயக்குனர் விக்னேஷ்வரன், விஷால் உள்பட பல திரையுலகினர் அந்த இரண்டு விஜேக்களுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் 'அருவி' படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா? என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர், 'தம்பி பிரபு நீ கிழம்பு! அருவி போல தரமான படத்தில தளபதி பத்தி தப்பா பேசின ஆளு நீ , நீ எல்லாம் பஞ்சாயத்து பேசலாமா? என்று கமெண்ட் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கூறிய எஸ்.ஆர்.பிரபு, 'உனக்கு பதில் சொன்னா டேமேஜ் உனக்கில்ல...நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன். அதனால... மூடிட்டு போ!! என்று பதிலடி கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.பிரபுவின் இந்த பதிலடிக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

More News

வைரமுத்து மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக வைரமுத்து மீது தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வைரமுத்து மனுதாக்கல் செய்திருந்தார்

சூர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் விஜே மணிமேகலை!

நடிகர் சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மின்னல் வேகத்தில் தயாரான 'தளபதி 62' படத்துவக்க போஸ்டர்

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 62' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி சற்றுமுன் இணையதளங்களில் வெளியானது

வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை: சென்னை ஐகோர்ட்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

'AAA' தயாரிப்பாளருக்கு விஷால் கொடுத்துள்ள வாக்குறுதி

மைக்கேல் ராயப்பன் அவர்களுக்காக சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்து தர நான் தயார். படப்பிடிப்பு, பிசினஸ் என அனைத்தும் முடிந்த பின்னர் அவரே எனது சம்பளமாக கொடுக்கும் தொகையை பெற்று கொள்வேன்'