தாயின் பேட்டியை பார்த்து கதறிய ஸ்ரீரெட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. திரையுலகில் வாய்ப்பு பெற்று தருவதாக தன்னை ஏமாற்றி தன்னிடம் பாலியல் வல்லுறவு கொண்ட பெரிய மனிதர்களின் முகமூடியை கிழிக்காமல் விடமாட்டேன் என்று அவர் சவால் விடுத்து ஒவ்வொருவரது பெயராக லீக் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் தாயாரின் பேட்டி தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியை கண்டு ஸ்ரீரெட்டி கதறி அழுத காட்சியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரெட்டியின் தாயார் புஷ்பாவதி தனது பேட்டியில், 'ஸ்ரீரெட்டி தனக்கு நேர்ந்த எந்த விஷயத்தையும் தன்னிடம் சொல்லவில்லை என்றும், தனது மகள் வித்தியாசமானவர் என்றும், அவர் இந்த விஷயத்தில் என்னுடைய உதவி தேவைப்பட்டு கேட்டால் அவருக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் தானாக அவருடைய வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
சிறுவயதிலேயே ஸ்ரீரெட்டி சொந்தமாக முடிவெடுக்கும் தன்மையுடன் இருந்ததாகவும், நடிகையாவதில் எனக்கு விருப்பமில்லை என்று நான் கூறியபோது, என்னுடைய பிரச்சனையில் நீங்கள் தலையிட வேண்டாம், உங்கள் பேச்சை நான் கேட்க முடியாது, எது நல்லது, எது எனது விருப்பம் என்று எனக்கு தெரியும் என்றும் அவர் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீரெட்டி சரியான பாதையில் சென்றால் கண்டிப்பாக நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறிய புஷ்பாவதி அரை நிர்வாண போராட்டம் குறித்து கூட தனக்கு எதுவும் தெரியாது என்றும் இதுகுறித்து நான் கேள்விப்பட்டவுடன் அவரிடம் பேச முற்பட்டபோது இந்த விஷயம் குறித்து என்னிடம் எதுவும் பேச வேண்டாம் என்று அவர் கூறிவிட்டதாகவும் புஷ்பாவதி தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com