ராகவா லாரன்ஸ் சவாலை ஏற்ற ஸ்ரீரெட்டி

  • IndiaGlitz, [Tuesday,July 31 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நேற்று அவருக்கு ஒரு சவால் விடுத்தார். தான் எதிர்பார்க்கும் நடிப்பு மற்றும் நடன அசைவுகளை ஸ்ரீரெட்டி தந்தால் அவருக்கு தன்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு தர தயார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் 'ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களுக்கு என குறிப்பிட்டு ஒருசில வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அதில் அஜித்தின் 'ஆலுமா டோலுமா', விஜய்யின் 'நீதானே நீதானே' உள்பட ஒருசில பாடல்களுக்கு நடித்து காட்டியுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ரீரெட்டியின் பதிவு செய்துள்ள வீடியோவை பார்த்து ராகவா லாரன்ஸ் அவருக்கு வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்