நானாக இருந்தால் அறைந்திருப்பேன்; நயன்தாரா விவகாரம் குறித்து ஸ்ரீரெட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா - நடிகர் ராதாரவி விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக திரையுலகம் மட்டுமின்றி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் வாய் திறக்காத பல திரையுலக நட்சத்திரங்கள், நயன்தாரா விவகாரத்தில் வரிந்து கட்டிகொண்டு தங்களுடைய கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டியும் இதுகுறித்து தனது பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார். நயன்தாரா ஒரு கண்ணியமான பெண் என்றும் அதனால் அவர் இந்த விஷயத்தில் அமைதி காப்பதாகவும், ஆனால் நான் கொடூரமான பெண் என்றும் இந்த மாதிரியான வார்த்தைகளை கேட்டால் நேராக சென்று அறைந்துவிடுவேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
ஸ்ரீரெட்டியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் நெட்டிசன்கள் ஸ்ரீரெட்டியின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout