ஸ்ரீரெட்டி வெளியிட்ட சிம்பு வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சிம்பு குறித்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சிம்புவுக்கு எந்த மாதிரியான வாழ்க்கைத்துணைவி வேண்டும் என்று ஸ்ரீரெட்டி கேட்ட கேள்வியும் அதற்கு சிம்பு கூறிய பதிலும் உள்ளது.
ஸ்ரீரெட்டியின் இந்த கேள்விக்கு பதிலளித்த சிம்பு, 'எனக்கு வரும் வாழ்க்கை துணைவி ஒரு பெண்ணாக இருந்தால் போதும். இதில் நிறைய அர்த்தம் உள்ளது. பெண்களுக்கான உரிமை என்பது ஒரு ஆண் செய்வதை பெண் செய்வதுதான் உரிமை என்று எல்லோரும் தவறாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் தான் விருப்பப்பட்டு செய்ய வேண்டியதை செய்யவிடாமல் தடுப்பதை எதிர்த்து போராடுவதே உண்மையான பெண்ணின் உரிமையாக நான் பார்க்கின்றேன். ஒரு பெண்ணால் மட்டுமே ஒருசிலவற்றை செய்ய முடியும். அந்த செயல்களை செய்யும் புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் எனக்கு போதும் என்று பதிலளித்துள்ளார்.
Thank you #simbu sir for answering my question... you are so genuine just like your father t.rajendhar gaaru... I respect tr sir a lot... #SriReddy pic.twitter.com/umov6Hy0Um
— Sri Reddy (@srireddy_) August 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments