நீங்கள் எவ்வளவு பெரிய மோசடியாளர் என்பது உலகத்திற்கே தெரியும்.. யாரை சொல்கிறார் ஸ்ரீரெட்டி?
Send us your feedback to audioarticles@vaarta.com
நீங்கள் எவ்வளவு பெரிய மோசடியாளர் என்பது இந்த உலகத்திற்கே தெரியும் என நடிகை ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்த செய்திகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் ’ஸ்ரீரெட்டி யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் அதே நேரத்தில் அவர் செய்த சேட்டைகள் மட்டும் எனக்கு தெரியும்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் ’பெண்ணியம் காப்பவரே வணக்கம், வெள்ளை முடி கொண்ட வயதான மாமாவே வணக்கம். நீங்கள் ஒரு பெண்ணை பற்றி பேசும்போது உங்களுடைய நாக்கு ஊடகத்தின் முன் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் காலம் காலமாக மோசடி செய்பவர் என்பது உலகத்துக்கே தெரியும்.
நீங்கள் மோசடி நபராக இருந்து கொண்டு மீடியாவுக்கு முன்னால் உங்களை மரியாதைக்குரியவர் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் இருந்த ஒவ்வொரு பெண்ணும் உங்களை விட்டு விலகிச் சென்றது ஏன்? உங்களுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திடீரென அந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது ஏன்? இந்த கேள்விகளுக்கு அடுத்த முறை பதில் சொல்லுங்கள்.
கர்மா உங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது, என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது, உங்களுக்கு ஒன்றே ஒன்று வேண்டுமா? சொன்னால் வெளியிடுகிறேன், என்று கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hi mr.womaniser &white hair very old uncle,when you are talking about a woman ,I think your tongue 👅 should be very careful in front of the media..the way u use a filthy language about a lady,the way you shiver ,the way you create problems to the good people everyone knows..you…
— Sri Reddy (@SriReddyTalks) August 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com