முருகதாஸ் அவர்களே! என்னை ஞாபகம் இருக்கின்றதா? ஸ்ரீரெட்டியின் ஃபேஸ்புக் பதிவு

  • IndiaGlitz, [Wednesday,July 11 2018]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்திற்கு வில்லங்கம் மேல் வில்லங்கம் வந்து கொண்டிருக்கின்றது. விஜய்-முருகதாஸ் இதற்கு முன்னர் இணைந்த 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய படங்களை போலவே இந்த படமும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சனைகளை முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும்முன் முருகதாஸ் அவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும்

இந்த நிலையில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது முருகதாஸ் குறித்தும் தனது முகநூலில் ஒரு பதிவை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் இயக்குனர் முருகதாஸ் அவர்களே எப்படி இருக்கின்றீர்கள்? கிரீன் பார்க் ஹோட்டலில் வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் அறிமுகத்தால் நாம் சந்தித்தோம், நினைவு உள்ளதா? எனக்கு பட வாய்ப்பு அளிப்பதாக கூறினீர்கள். ஆனால் இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை' என்று பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே தனக்கு ஒரு தமிழ் இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ரீரெட்டி கூறியுள்ள நிலையில் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.