close
Choose your channels

தமிழ்நாடு அரசியலில் குதிக்கின்றாரா ஸ்ரீரெட்டி?

Thursday, May 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியல் களம் எப்போதுமே திரை நட்சத்திரங்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் என்பது தெரிந்ததே. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என நான்கு தமிழக முதல்வர்களும் திரையுலகில் இருந்தவர்கள்தான். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என தமிழக அரசியலில் திரை நட்சத்திரங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே உள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழக அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆந்திர அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம் செய்தாலும் தனக்கு தமிழக அரசியலில் ஈடுபடவே விருப்பம் என்றும், ஒரு பெரிய கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கமல்ஹாசன் நடத்தவுள்ள 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு சேனல் நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அந்த அழைப்பை தான் நிராகரித்துவிட்டதாகவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment