தமிழ் இயக்குனரும் பாலியல் தொல்லை கொடுத்தார்: ஸ்ரீரெட்டியின் புதுகுண்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களால் தெலுங்கு திரையுலகமே அதிர்ந்தது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர். மேலும் தன்னுடைய குற்றச்சாட்டுக்கு 90% ஆதாரங்கள் இருப்பதாகவும் நேரம் வரும்போது அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியிருப்பதால் எந்த நேரத்திலும் அந்த ஆதாரங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் இயக்குனர் ஒருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தன்னை பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளார். அவரது பெயரை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளதால் அந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்த நிகழ்வை தவிர்த்துவிட்டு பார்த்தால் தமிழ் திரையுலகம் பெண்களுக்கு மதிப்பு கொடுத்து வருவதாகவும், விரைவில் தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்றும், தமிழ் திரையுலகிற்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout