உங்க சிரிப்பு கேவலமாக இருந்தது: கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

சமீபத்தில் நடைபெற்ற 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டின்போது ஸ்ரீரெட்டி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விஷால், 'ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வரவேற்பதாகவும் இனிமேல் அவருடன் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள் என்றும், அவர் தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைத்து இருப்பார்’’ என்றும் கூறினார்.

விஷால் இவ்வாறு கூறியபோது மேடையில் உட்கார்ந்திருந்த கீர்த்திசுரேஷ் சிரித்தார். கீர்த்திசுரேஷின் சிரிப்பால் கடுப்பான ஸ்ரீரெட்டி தனது முகநூலில் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது: கீர்த்தி சுரேஷ், உங்கள் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி குறித்து விஷால் கூறியபோது கீர்த்திசுரேஷ் மட்டுமின்றி மேடையில் இருந்த அனைவரும் சிரித்ததாகவும், ஆனால் ஸ்ரீரெட்டி, கீர்த்திசுரேஷை மட்டும் வம்புக்கு இழுப்பதாகவும் கீர்த்திசுரேஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.