சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிகையா? வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகிய திரைப்படம் ’தி டர்ட்டி பிக்சர்ஸ்’. பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்து இருந்த இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தமிழ் உள்பட பல மொழிகளில் ஏற்கனவே பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிகை ஸ்ரீரெட்டி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மது என்பவர் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் மற்ற விவரங்களை விரைவில் தருகிறேன் என்றும் ஸ்ரீரெட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#SriReddy announces aTamil, Telugu bilingual movie biopic based on #Silksmitha !
— Diamond Babu (@idiamondbabu) February 11, 2021
More details soon.@RIAZtheboss pic.twitter.com/6Mn78eyL4M
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments