செல்ல பேரனுடன் கமல்-ரஜினி பட நடிகை: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 200 திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். மேலும் நீயா, நட்சத்திரம் ஆகிய படங்களை தயாரித்துள்ள இவர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ’த்ரிஷ்யம்’ உள்பட 6 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 1988ஆம் ஆண்டு ராஜ்குமார் சேதுபதி என்பவரை ஸ்ரீபிரியா திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகை லதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீபிரியா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது பேரனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பேரனுடன் தான் வாக்கிங் செல்வதாக குறிப்பிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களையும் லைக்ஸ்களையும் தெரிவித்து வருகின்றனர்.
A walk with my grandson?? pic.twitter.com/zjWgfkr7Hm
— sripriya (@sripriya) February 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com