கமல் நடிக்கவில்லை என்றால் 'த்ரிஷ்யம் 2' உருவாகுமா? ஸ்ரீப்ரியா பதில்

  • IndiaGlitz, [Thursday,February 25 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கி விட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான ’பாபநாசம் 2’ படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில் ’பாபநாசம் 2’ படத்தை நடிகை ஸ்ரீபிரியா தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் ’பாபநாசம் 2’ படத்தையும் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பாபநாசம் 2’ படம் குறித்து பேட்டியளித்த ஸ்ரீபிரியா ’பாபநாசம் 2’ படத்தில் கமல்ஹாசன் நடித்தால் மட்டுமே நாங்கள் தயாரிப்போம் என்றும் இல்லையெனில் தயாரிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் கவுதமி நடிக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது என்றும் ஆனால் ’பாபநாசம் 2’ படத்தை இயக்கும் ஜீத்துஜோசப் கமல்ஹாசன் தவிர மற்ற நட்சத்திரங்கள் யார் யார் என்பதை அவரே முடிவு செய்வார் என்றும் அவர் எடுக்கும் எந்த முடிவும் தயாரிப்பாளராக நான் தலையிட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘த்ரிஷ்யம் 2’ தெலுங்கு திரைப்படத்தை இயக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் தேர்தல் பணியின் காரணமாக அந்த படத்தை இயக்க தன்னால் முடியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் தேர்தல் பணி காரணமாக கமல்ஹாசன் தற்போது பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்தவுடன் ’பாபநாசம் 2’ படத்தின் பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.