பாலியல் வழக்கில் சாகும்வரை ஜெயில்…. தீர்ப்பை வரவேற்ற தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
14 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு மரணம்வரை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தண்டனையை மூத்த நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினருமான ஸ்ரீப்ரியா வரவேற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குமாரக்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு சிலர் கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட குணசேகரன் என்கிற (திலகர் வயது34), கட்டமணியார் என்கிற (ஜெய்சங்கர் வயது 49) ஆகிய இருவருக்கும் கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எழிலரசி மரணமடையும் வரை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இந்தத் தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரும் நடிகையுமான ஸ்ரீப்ரியா வரவேற்றுள்ளார். மேலும் சாகும்வரை சிறையில் இருப்பதுஇதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் "கடலூர் போக்ஸோ நீதிமன்றம் முன்மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு, சிறுமிகளுக்கு எதிரான கயமையில் ஈடுபடுகிறவர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கட்டும். குற்றவாளிகள் இருவரும் ஆயுள்காலம் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
பண்படாத சமூகத்தில் தண்டனைகள் வாயிலாகவே நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட இயலும் என்ற வகையில் இத்தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இனிவரும் காலங்களில் குற்றங்கள் தண்டனைகளற்ற லட்சியச் சமூகம் நோக்கி நாம் மானசீகமாகப் பயணிப்போம். ஒருநாள் நிச்சயம் கண்டடைவோம்" என்று ஸ்ரீப்ரியா அறிக்கை வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout