அரசன் அன்று கொல்லும், பிக்பாஸ் நிகழ்ச்சி மறுநாள் கொல்லும்: பிரபல நடிகை கேலி 

  • IndiaGlitz, [Friday,October 23 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கேலியும் கிண்டலும் செய்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான ஸ்ரீபிரியா தனது சமூக வலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்தவித விருப்பமில்லாமல் பார்வையாளர்களை கொல்கிறது என்ற அர்த்தத்தில் ’அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்...BB house மறு நாள் கொல்லும்’ என்று கேலி செய்து கொண்டு வீட்டை பதிவு செய்துள்ளார்

மேலும் இன்னொரு டிவிட்டில் நேற்றைய நிகழ்ச்சியில் எந்த சண்டையும் இல்லை என்பதை குறிக்கும் வகையில், ‘அப்படியா? நிஜமாகவா? இன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாமல் நிகழ்ச்சி முடிந்து விட்டது? சபாஷ் என்று குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தினமும் அந்த நிகழ்ச்சியை ஸ்ரீபிரியா விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.