பிக்பாஸ் எத்தனை மணிக்கு? கேள்வி கேட்ட கமல், ரஜினி பட நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டு நேற்று முதல்நாள் நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன என்பதும் முதல் நாளே விறுவிறுப்பாக சென்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் 9.30 மணி முதல் ஒளிபரப்பாகும் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் கமல் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருப்பவருமான நடிகை ஸ்ரீப்ரியா பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது என்று தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு 9.30 மணி என ஒரு சிலர் பதிலளித்து உள்ளனர். ஒருசிலர் அவரை கலாய்த்துள்ளனர்.

விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு விளம்பரம் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வருவதாகவும் அதில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நெட்டிசன்கள் இதை போய் டுவிட்டரில் கேள்வி கேட்கிறாரே என்று கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டபோது ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் தனது கருத்தை ஸ்ரீபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசன்களில் கூட பிக் பாஸ் போட்டியாளர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீபிரியா பல கருத்துக்களை தெரிவித்தார் என்பதும் அவரது கருத்து பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

ஜேம்ஸ்பாண்ட் படத்தை அடுத்து மேலும் ஒரு ஹாலிவுட் பட ரிலீஸ் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட அனைத்து பணிகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கத்தில் நயன்தாரா? ஆச்சரிய தகவல் 

லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, தனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தால் அறிமுக இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களுடன் கூட நடிக்க தயங்க மாட்டார் என்பது தெரிந்ததே.

அஜித்துடன் நடிக்கும் விஜய்யின் ரீல் மகன்: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'மெர்சல்' என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

ஒரு நிமிட வீடியோவில் படங்களும் கேரக்டர்களும்: த்ரிஷா வெளியிட்ட வீடியோ!

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பது தெரிந்ததே. 'ஜோடி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த த்ரிஷா 'மௌனம் பேசியதே'

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இந்த ஆண்டு கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவைகளில் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.