மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமை ஏற்பது உறுதி. சீனிவாசன் நம்பிக்கை

  • IndiaGlitz, [Saturday,April 01 2017]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை அடுத்த வருடம் முடியவுள்ள நிலையில் அந்த அணியை வாங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட சீனிவாசன் இந்த தகவலை தெரிவித்தார்
மேலும் அவர் கூறியபோது, 'சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி. மீண்டும் வரும் 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும். இந்த அணிக்கு மீண்டும் தலலமையேற எந்த விலை கொடுத்தேனும் தோனியை அதே அணிக்கு கேப்டனாக்குவோம். மீண்டும் மஞ்சள் உடையில் தோனி குழுவினர் களமிறங்குவதை சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகரும் அடுத்த வருடம் பார்க்கத்தான் போகின்றார்கள்.
இரண்டு ஆண்டுகள் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் சிஎஸ்கேவின் மதிப்பு சிறிதுகூட குறையவில்லை. இதற்கு முக்கிய காரணம் தோனியின் தலைமை. சென்னையை தோனி மிகவும் விரும்பினார். அதுமட்டுமின்றி சென்னை மக்களும் தோனி மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர்.
சிஎஸ்கேவுக்கு விதிக்கப்பட்ட தடை நியாயமற்றது. பொறாமையினால் சிஎஸ்கே மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டது' இவ்வாறு சீனிவாசன் கூறினார்.