தமிழர்களைக் கொன்ற இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவுக்குள் நுழைய தடை..!

  • IndiaGlitz, [Saturday,February 15 2020]

2009ல் நடந்த ஈழ இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த படையணியின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் வர அந்த நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை மிகக் கொடூரமாக இலங்கை ராணுவம் படுகொலை செய்தது. பன்னாட்டு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த கொடூர இன அழிப்புப் போரை உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்த்தன.

இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தற்போதைய இலங்கை ராணுவத் தளபதியான ஷாவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

போர் நடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை வகித்த அவர் தமிழர்களுக்கான அடிப்படை வசதிகளை தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை உள்நாட்டு போரின் போது, செய்த குற்றங்களுக்காக சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்போம்பியோ தெரிவித்துள்ளார்.