close
Choose your channels

காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கை அமைச்சர் எழுதிய கடிதம்: எதற்கு தெரியுமா?

Monday, June 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கை அமைச்சர் கடிதம் எழுதிய தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

வடிவேலு உள்பட பல பிரபல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிளாக் பாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடி தெரு’ என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையிலும் ஜொலித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகராக மட்டுமின்றி இவர் ’உதவும் மனிதம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பொருளாதார சிக்கலால் தத்தளித்து வரும் இலங்கைக்கும் அங்கு உள்ள தமிழ் மக்களுக்கும் உதவுவதற்காக அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதம் எழுதினார்

இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களிடம் இருந்து பொருட்களை சேகரித்து எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணியை சிறக்க எனது வாழ்த்துக்கள்

உங்கள் செயலால் இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழக மக்களுக்குமான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனிதாபிமான உதவி பொருட்கள் எமது கப்பல் சேவை மூலம் கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்கிறேன். எனவே நம்பிக்கையுடன் உங்கள் பணியைத் தொடங்கலாம். ஈழத்தமிழ் மக்கள் சார்பாகவும் இலங்கை அரசு சார்பாகவும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என கடிதம் எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment