உடலுக்கு நல்லது என கூறிய Facebook வீடியோ பார்த்து, ஜூஸ் போட்டு குடித்த இளைஞர் பலி.

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

இலங்கையின் கம்பஹா பகுதியை சேர்ந்த ஒருவர் தன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் அதிகமாக நேரம் செலவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படியாக இவர் ஒரு நாள் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்த போது அதில் கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பரிந்து அதை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

அதை பார்த்த அவர் அப்படி செய்ய நினைத்து அந்த மரத்தின் இலைகளை பறித்து ஜூஸ் போட்டு குடித்துள்ளார். அவர் ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

கஜ மடாரா மரத்தை பார்த்து யானைகள் கூட பயப்படும். பாம்புகள், பூச்சிகள் கூட இந்த மரத்தின் இலை, காய், கனி என எதையும் தொடாது. அவ்வளவு விஷமுள்ள மரத்தின் இலைகளை ஃபேஸ் புக்கில் வீடியோவாக வந்தது என்பதற்காக உண்மைத்தன்மை அறியாமல் இளைஞர் ஜூஸ் போட்டு குடித்து உயிர் விட்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.