'பிகில்' படத்துக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க: பிரபல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டிரைலரை கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி டோலிவுட் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களும் பார்த்து, பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திரைப்படத் துறையினர் மட்டுமின்றிஒ இந்த படத்தின் டிரைலரை மற்ற துறையினர்களும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ரஸல் அர்னால்ட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'பிகில்' திரைப்படத்தின் டிரெய்லரை தான் மிகவும் ரசித்து பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அப்பா விஜய் கேரக்டரான ராயப்பன் என்ற கேரக்டர் மாஸ் ஆக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படம் ரிலீசாகும் வார இறுதி நாட்களில் தனக்கு 2 டிக்கெட்டுகள் கிடைக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மொத்தத்தில் 'பிகில்' திரைப்படம் தமிழக ரசிகர்களை மட்டுமின்றி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
BIGILAAAAAEEE!! Dei Mama @srinimaama16, thanks for introducing me to #ThalapathyVijay @actorvijay & Tamil movies. Totally loved the #BigilTrailer. Raayappan character is andhar mass. Somebody get me 2 tickets Nanba! @archanakalpathihttps://t.co/Ooz7yC8uQL pic.twitter.com/nmI51I9ldo
— Russel Arnold (@RusselArnold69) October 13, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments