கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 வெடிகுண்டு கண்டுபிடிப்பு: மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா?
- IndiaGlitz, [Monday,April 22 2019]
இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படையினர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான 300 பேர்களில் 6 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 வெடிகுண்டு டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்த இலங்கை அதிபர் சிறிசேனா மீண்டும் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் முப்படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அதிபர் மைத்ரிபாலா சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அமலுக்கு வருகிறதாகவும் அறிவித்துள்ளார். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது