ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு முதல்வர் ஆதரவு

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி, 'தான் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார்.

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  வடக்கு மாகாண முதல்வர், 'ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ரஜினியின் அரசியல் வருகைக்கு இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சிம்பு-ஓவியா திருமணமா? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களிடையே புகழ்பெற்ற ஓவியா தற்போது திரைப்படங்கள், விளம்பர படங்கள் என பிசியாக உள்ளார்.

எங்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறா? போக்குவரத்து தொழிலாளியின் மகள் நெகிழ்ச்சி பதிவு

தமிழக போக்குவரத்து தொழிலாளிகளின் போராட்டம் ஆறாவது நாளாக நீடித்து வரும் நிலையில் ஒருபக்கம் அரசும், இன்னொரு பக்கம் தொழிலாளர்களும் பிடிவாதமாக இருப்பதால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை

2ஆம் பாகமாகும் சசிகுமார்-சமுத்திரக்கனியின் வெற்றிப்படம்

திரையுலக நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வரும் சமுத்திரக்கனி-சசிகுமார் இணைந்து பணியாற்றிய 'சுப்பிரமணியபுரம், 'நாடோடிகள்',

திருடனை திட்டினால் தவறா? சித்தார்த்

நேற்று நடிகர் சித்தார்த் ஆன்லைன் பைரசியை ஆதரவு தெரிவித்த ஒரு ரசிகரை தனது டுவிட்டரில் திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'அவள்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பார்த்து கொள்கிறோம்

ஆதார் குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவல்

ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், ரூ.500 கொடுத்தால் ஆதார் அட்டையில் உள்ள விபரங்கள் தெரிவிக்கப்படும் மற்றும் மாற்றப்படும்