ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு முதல்வர் ஆதரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி, 'தான் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார்.
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு மாகாண முதல்வர், 'ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன்' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ரஜினியின் அரசியல் வருகைக்கு இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com