பெண்களும் மது விற்கலாம், வாங்கலாம்: 38 ஆண்டுகால தடையை நீக்கியது இலங்கை
- IndiaGlitz, [Saturday,January 13 2018]
38 ஆண்டு காலமாக இலங்கையில் மது வாங்கவும், விற்பனை செய்யவும் பெண்களுக்கு இருந்த தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.
கடந்த 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு பெண்கள், மது வாங்க, விற்க தடை செய்தது. இருப்பினும் ஒருசில தொழில் நிறுவனங்களில் மதுபானம் பரிமாறும் மற்றும் விற்பனையில் பெண்களை ஈடுபடுத்தி வந்தது
இந்த நிலையில் சுற்றுலா துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பெண்களும் மதுவிற்பனையில் ஈடுபடலாம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை நிதி அமைச்சர் மங்கல சமரவீரா, பெண்கள் வாங்க, விற்க இருந்த தடையை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அதுமட்டுமின்றி வழக்கமாக 9 மணிக்கே மதுபானக்கடைகள் மூடப்படும் நிலையில் தற்போது மேலும் ஒரு மணி நேரம் நீட்டித்து 10 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்க இலங்கை அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மது அருந்துவது இலங்கையின் கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் எதிரானது என்றும், அரசின் இந்த முடிவால் பெண்கள் மதுவிற்கு அடிமையாகும் நிலை ஏற்படும் என்றும் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பெரும்பாலானோர் இந்த உத்தரவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.