ரஜினிக்கு விசா மறுப்பா? இலங்கை அரசு விளக்கம்

நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னைக்கு வருகை தந்திருந்தபோது, நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஜினியை அவர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதிக்கு வருகை தரும்படி அழைத்ததாக தகவல்கள் வெளிவந்தது.

இதனையடுத்து ரஜினி இலங்கைக்கு செல்ல முடிவெடுத்து விசாவுக்காக விண்ணப்பம் செய்ததாகவும், ஆனால் இலங்கை அரசு விசா தர மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

விசா கோரி ரஜினியிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும் நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஜினிக்கு விசா தர இலங்கை அரசு மறுப்பு தெரிவித்ததாக வெளிவந்த தகவல் வதந்தி என்பது தெரிய வருகிறது.

More News

மக்களின் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தற்போது மக்கள் செல்வன் என்ற பட்டத்தை பெற்றுள்ள விஜய்சேதுபதி மக்களின் விருப்பத்துக்குரிய நடிகராகவே மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று பிறந்த நாள் கொண்டாடும்

கிராம சபை கூட்டம் - பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சில விளக்கங்கள்

இந்தியாவின் பொருளாதாரம் கிராமங்களில் இருந்து தான் தொடங்குகிறது என்றார் காந்தியடிகள். கிராமங்கள் தன்னளவில் தன்னிறைவு பெற்று விளங்கினால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சி நிலைமையில் முன்னேற்றம் பெற முடியும்.

விக்ரம் வேதா இயக்குனருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

விஜய் சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர்

பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி: சின்னத்திரையுலகில் பரபரப்பு!

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ளதால் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்முதலாக ஜோடி சேரும் மாதவன் - சமந்தா: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் மாதவன் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் பிளேபாய் கேரக்டர் முதல் முதிர்ச்சியான கேரக்டரை ஏற்று நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.