ரஜினிகாந்த் இலங்கை வந்தால் இதெல்லாம் நடக்கும்.. இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன் ..!
- IndiaGlitz, [Tuesday,May 30 2023]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வர வேண்டும் என இலங்கைக்கான தூதர் வெங்கடேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் நேற்று இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ’ரஜினிகாந்த் இலங்கை வர வேண்டும் என்றும் அங்குள்ள ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களை பார்வையிட வேண்டும் என்றும் மேலும் இலங்கையில் உள்ள பாரம்பரிய கலாச்சார மத சின்னங்களை அவர் பார்வையிட இலங்கைக்கு வர வேண்டும் என்று வேண்டுங்கள் வேண்டுகோள்.
ரஜினிகாந்த் இலங்கைக்கு வந்தால் இந்தியா இலங்கை நாடுகளின் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் திரைப்பட வளர்ச்சிக்கும் அவரது வருகை உதவும் என்றும் தூதர் வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக ரஜினி உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே தங்கள் நாட்டுக்கு விருந்தினராக வருமாறு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளின் தூதுவர்கள் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் தற்போது இலங்கை தூதரும் நேரில் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.