பிப்ரவரி 12-ல் ரிலீஸ் ஆகும் பேய்ப்படம்

  • IndiaGlitz, [Monday,January 18 2016]

ஏப்ரல் மாதத்தில், ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு, நண்பன், உள்பட பல படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், கடந்த சில வருடங்களாக சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில் கோலிவுட் திரையுலகில் மீண்டும் ரிஎண்ட்ரி ஆக ஒரே ஒரு வெற்றியை எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'செளாகார்பேட்டை' படம் அவருக்கு கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடமே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி, சரவணன், சுமன் மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். சீனிவாச ரெட்டி ஒளிப்பதிவும், எலீஸ் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.