சிம்பு மாதிரி எல்லோருக்கும் தைரியம் வருமா? ஓப்பனாக புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவரும் நடிகர் ஸ்ரீகாந்த் விழா ஒன்றில் கலந்துகொண்டபோது எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது, ஹேட்ச் ஆப் சிம்பு என மனதாரப் பாராட்டியுள்ளார். இது சிம்பு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
“மாநாடு“ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிம்பு சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்படும் மனிதராக மாறியிருக்கிறார். அந்த வகையில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் நடிகர் சிம்புவை குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இயக்குநர் மணிபாரதி இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் “தி பெட்“ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகை சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஸ்ரீகாந்த் முதலில் “பெட்” எனும் படத்தின் பெயரைக் கேட்டு முதலில் பயந்தே விட்டேன்.
படத்தின் தலைப்பு சில நேரங்களில் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறது. “எல்லோருக்கும் நடிகர் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது. ஹேட்ஸ் ஆப் சிம்பு… ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு டோட்டலாக இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துவிடுவார்“ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50 ஆவது திரைப்படமான “மஹா“ திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன், ஸ்ரீகாந்த் இணைந்து நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் நடிகர் சிம்புவை ஸ்ரீகார்ந்து புகழ்ந்து இருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout