விஷாலை விட இருமடங்கு சேவை செய்த ஸ்ரீதிவ்யா-சூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் இராஜபாளையத்தில் மருது படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஐந்து கழிவறைகளை கட்ட விஷால் முயற்சி எடுத்து அதற்கு தேவையான பணத்தையும் அளித்தார் என்று வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் 'மருது' பட நாயகியும் பிரபல நடிகையுமான ஸ்ரீதிவ்யா அதே இராஜபாளையம் பகுதியில் பத்து கழிவறைகள் அமைக்க ரூ.80,000 அளித்துள்ளாராம். இந்த பணத்தை அவர் சூரியுடன் இணைந்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருது படக்குழுவினர்களால் தற்போது மொத்தம் 15 கழிப்பறைகளின் பணிகள் அந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. இதே போன்று மற்ற படக்குழுவினர்களும் தாங்கள் படப்பிடிப்பு நடத்தும் பகுதிகளுக்கு தங்களால் இயன்ற உதவியினை செய்தால் பாரத பிரதமரின் கனவு திட்டமான 'தூய்மை இந்தியா' விரைவில் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com