'சர்கார்' படத்தில் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தின் ஒரு பாடலில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள ஸ்ரீதர் மாஸ்டர் கூறியுள்ளார்.

விஜய் நடனம் ஆடும் பாடல் என்றாலே அந்த பாடலில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பது என்னுடைய வழக்கம். அதேபோல் இந்த படத்தின் ஒரு பாடலிலும் ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளேன். நிச்சயம் அந்த சர்ப்ரைஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும்

மேலும் எவ்வளவு நீளமான ஸ்டெப்ஸ் வைத்தாலும் விஜய் அதை ஒரே டேக்கில் முடித்து கொள்வார். பல்லவி முழுவதையும் ஒரே டேக்கில் ஆடுவது என்பது விஜய்யை தவிர யாராலும் முடியாத ஒன்று.

அதேபோல் இந்த படத்தின் ஒரு பாடலில் ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூறியபோது அவர் தான் ஒரு பெரிய இசையமைப்பாளர் என்ற ஈகோ இல்லாமல் நான் நினைத்தபடி மாற்றி கொடுத்தார். இந்த படத்தின் பாடலுக்காக நானும் எனது டீமும் கடுமையாக உழைத்திருக்கின்றோம். இவை அனைத்தும் விஜய் ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் என்று டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.