நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? சுவிஸில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

  • IndiaGlitz, [Tuesday,July 26 2022]

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி தனது மகளின் பிறந்தநாளை சுவிட்சர்லாந்தில் கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் அந்த புகைப்படங்களை ரசித்து வருகின்றனர்.

கடந்த 1992ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த ’ரிக்சா மாமா’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி. அதன் பிறகு பாக்யராஜின் ’அம்மா வந்தாச்சு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் ’காதல் வைரஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியானார்.

மாதவனுடன் ‘பிரியமான தோழி’ ஜீவாவுடன் ’தித்திக்குதே’ தனுஷுடன் ’தேவதையை கண்டேன்’ உள்பட ஸ்ரீதேவி பல தமிழ் படங்களில் அவர் நடித்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரூபிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆறு வயதாக இருக்கும் ரூபிகாவின் பிறந்த நாளை தனது கணவர் மற்றும் மகளுடன் சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவி கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவி தனது கணவருடன் சேர்ந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ச் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

மனைவியை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் ஹீரோ!

தமிழ் ஹீரோ ஒருவரின் மனைவி எம்.பிபிஎஸ் டாக்டர் என்ற நிலையில் தற்போது நடிகரும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மறுமணமாகி ஐந்து மாதங்களில் குழந்தை பெற்ற 'அண்ணாத்த' நடிகை: ரசிகர்கள் ஷாக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகை ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து ஐந்தே மாதங்களில் குழந்தை

உதயநிதி-மகிழ்திருமேனி படத்தின் அட்டகாசமான டைட்டில்-பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் பிரியங்காவின் அப்பா, அம்மாவை பார்த்ததுண்டா? வைரலாகும் ஃபேமிலி போட்டோ!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இன்று திரையுலகில் பிரபல பாடகர்களாக பலர் உள்ளனர்

ஒரு பெரிய இரும்பு டோரை ஓப்பன் பண்ண ஒரு சின்ன சாவி போதும்: சிபிராஜின்  'வட்டம்' டிரைலர்

சிபிராஜ் நடித்த 'வட்டம்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.