'பாகுபலி'யில் நடிக்கும் வாய்ப்பை ஸ்ரீதேவி இழந்தது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் வெளியான இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்டமான திரைப்படமான பாகுபலி' இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வசூலுடன் ஆச்சரியத்தக்க வசூலை கொடுத்து வருகிறது. இந்த படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், நாசர் மற்றும் ரம்யாகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மேலும் பாகுபலி' திரைப்படம் பாலிவுட்டில் உள்ள முக்கிய நடிகர், நடிகைகள் நடித்திராதபோதிலும், அங்கும் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தில் மிக அற்புதமாக ரம்யா கிருஷ்ணன் நடித்த கேரக்டரில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியை, எஸ்.எஸ்.ராஜமவுலி அணுகியதாகவும், ஆனால் அவர் ரூ.6 கோடி சம்பளம் கேட்டதால், எஸ்.எஸ்.ராஜமவுலி பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீதேவி நடித்தால், பாலிவுட் பிசினஸுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என பலர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் ஆலோசனை கூறியபோதிலும், தனது ஸ்கிரிப்ட் மீதுள்ள நம்பிக்கை காரணமாக அவர் இவ்வளவு பெரிய தொகை ஸ்ரீதேவிக்கு கொடுக்க மறுத்துவிட்டு, ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி எதிர்பார்த்தபடியே அவரது ஸ்கிரிப்ட் காரணமாக இந்த படம் பாலிவுட்டிலும் சக்கைபோடு போட்டு வருகிறது.
ஏற்கனவே எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'நான் ஈ' படத்தின் இந்தி டப்பிங் படமான 'மகி' நல்ல வெற்றி பெற்றுள்ளதால், இந்த படத்திற்கும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு இருந்தது என்றும், மேலும் பாகுபலி' படத்தின் இந்தி உரிமையை கரண்ஜோகர் பெற்றதால், அவரது சிறப்பான விளம்பரமும், பாலிவுட்டில் இந்த படம் வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments