ஒரே ஒரு நாளில் 35 வருட சாதனையை தவறவிட்ட ஸ்ரீதேவி

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

தென்னிந்திய மொழியில் பிரபலமாக இருக்கும்போதே பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி, அங்கும் நம்பர் ஒன் நடிகையாக மிக்குறுகிய காலத்தில் முன்னேறினார். பாலிவுட்டில் அவருக்கு பேரும் புகழையும் பெற்று தந்த முதல் திரைப்படம் 'ஹிம்மத்வாலா'

இந்த படம் கடந்த 1983ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதியுடன் இந்த படம் வெளியாகி 35 வருடங்கள் என்ற சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அதற்கு ஒருநாள் முன்னர் அதாவது பிப்ரவரி 24ஆம் தேதியே ஸ்ரீதேவி மரணம் அடைந்துவிட்டார்.

ஹிம்மத்வாலா' திரைப்படம் ஸ்ரீதேவிக்கு மட்டுமின்றி இந்த படத்தின் நாயகன் ஜிதேந்திராவுக்கு ஒரு முக்கிய படம். வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்து கொண்டிருந்த ஜிதேந்திராவுக்கு ஒரு திருப்புமுனையாக 'ஹிம்மத்வாலா' படத்தின் வெற்றி இருந்தது. ஸ்ரீதேவி, ஜிதேந்திரா இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற இந்த படத்தில் முதலில் நாயகியாக ரேகா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகிவிட அதன்பின்னர் ஸ்ரீதேவி இந்த படத்தில் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சன்னிலியோன் சாகும் தினத்தில் என்ன நடக்கும்? சர்ச்சைக்குள்ளான கஸ்தூரி டுவீட்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவுதான் அனைத்து இந்திய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக கடந்த நான்கு நாட்களாக உள்ளது.

சுபிக்சா சுப்பிரமணியன் கைது: ரூ.750 கோடி மோசடி செய்ததாக புகார்

ரூ.750 கோடி பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக சுபிக்சா நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் தமிழ்ப்பெண்ணிடம் பாராட்டு பெற்ற ஜோதிகா

நடிகை ஜோதிகா, 'துமாரி சுலு' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை இயக்குனர் ராதாமோகன் நடிக்கவுள்ளார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

டி.ராஜேந்தரின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு ஒரு கட்சி என்ற விகிதத்தில் அரசியல் கட்சிகள் பெருகி கொண்டே போகும் நிலையில் இன்று மேலும் ஒரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.

ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைது செய்யப்பட்டபோதே தமிழகத்தில் அடுத்த கைது ப.சிதம்பரம் தான் என்று பேட்டி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார்.