ஸ்ரீதேவியின் சம்பள பாக்கி புகாருக்கு 'புலி' தயாரிப்பாளர்கள் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'புலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவி, தனக்கு இன்னும் ரூ.50 லட்சம் சம்பள பாக்கியை 'புலி' படதயாரிப்பாளர்கள் தரவில்லை என்று புகார் கூறியுள்ள நிலையில் புலி படத்தயாரிப்பாளர்களான ஷிபு தமீன் மற்றும் பி.டி.செல்வகுமார் இதுகுறித்து தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
திருமதி. ஸ்ரீதேவி அவர்கள் மிகச்சிறந்த நடிகை. அவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக எங்கள் மீது நாங்கள் அவருக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக புகார் அளித்துள்ளார் என்று சில தினசரிகளிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளை கண்டு வேதனை அடைந்தோம். இதனால், அவர் அளித்த புகாரின் பெயரில் நாங்கள் பதில் கூற வேண்டிய இடத்தில் உள்ளோம்.
எங்கள் நிறுவனம் சார்பில் திரு.விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா ஆகியோரது நடிப்பில் 'புலி' திரைப்படத்தை தயாரித்தோம். இந்த படத்தில் ஸ்ரீதேவிக்கு ரூ.2.7 கோடி சம்பளமும், சேவை வரி ரூ.30 லட்சமும் சேர்த்து ரூ.3 கோடி சம்பளமாக பேசியிருந்தோம். பேசியபடி சம்பளமும் கொடுத்துவந்தோம். ஆனால் படபிடிப்பு முடியும் தருவாயில் ஸ்ரீதேவியின் கணவர் திரு.போனிகபூர் நீங்கள் 'புலி' படத்தை இந்தி, தெலுங்கில் டப்பிங் செய்தால் எக்ஸ்ட்ராவாக பணம் தெரவேண்டும் என்று கோடிக்கணக்கில் கேட்டார்.
நாங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியாகும் உரிமை, தயாரிப்பாளருக்கு மட்டும்தான் என்றும் ,விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இப்படத்தில் நடித்த யாருமே கேட்கவில்லை என்றும் கூறினோம். ஆனால், அவர் எங்கள் கோரிக்கை எதையும் கேட்காமல் எக்ஸ்ட்ரா பணம் தந்தால்தான் ஸ்ரீதேவி சூட்டிங் வருவார் என்றார். நாங்கள் பனையூர் ஆதித்யாராம் ஸ்டுடியோவில் பெரிய செட் போட்டு வைத்திருந்தோம். அத்தோடு விஜய், சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் அனைவரும் சூட்டிங்கிறாக காத்திருந்தனர். வேறு வழி இல்லாமல் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும் என்ற பயத்தில் தெலுங்கில் டப்பிங்கின்போது ரூ.15 லட்சமும், இந்தியில் டப்பிங் பேச ஹிந்தி சாட்டிலைட்டில் 20%மும் தருவதாக ஒப்புக்கொண்டோம்.
அப்போது இது தெரிந்து தயாரிப்பு சங்க நிர்வாகிகள் எதிர்த்தனர். இது வியாபார முறையில் இல்லாத ஒன்று என்று எங்களை திட்டினார்கள். இந்தி சாட்டிலைட்டை திரு.மனீஷ் அவர்களிடம் விற்றிருந்தோம். அவர்களிடமிருந்து 20% தொகையான ரூ.55 லட்சத்தையும் திரு.போனிகபூர் வாங்கியுள்ளார். தற்போது நாங்கள் முதலில் பேசியபடி சம்பளம் கொடுத்துவிட்டோம். எங்களது பணம் ரூ.20 லட்சம்தான் அவரிடம் உள்ளது. இந்தியில் ஸ்ரீதேவிக்கு மார்க்கெட் உள்ளது. தைரியமாக ரிலீஸ் செய்யுங்கள் என்று போனிகபூர் சொன்னார். அவர் சொன்னதால், இந்தியிலும் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து படத்தை ரிலீஸ் செய்தோம். அங்கிருந்தும் எங்களுக்கு ஒரு ரூபாய் வரவில்லை. தமிழில் புலி படத்திற்காக 3 காஸ்ட்யூம் டிசைனர்களை வைத்திருந்தோம். ஆனால் ஸ்ரீதேவி அவர்கள் தனக்கு மனிஷ் மல்ஹோத்தரா என்ற காஸ்ட்யூம் டிசைனர்தான் வேண்டும் என்று வைத்து அந்த வகையில் ரூ.50 லட்சத்துக்கு மேல் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்தியில் மார்கெட்டிங் டிசைனர் ஒருவரை வையுங்கள் என்று ஒருவருக்கு ரூ.8 லட்சம் கொடுக்க வைத்தார். இப்படி கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த படத்தின் வெளியீட்டின்போது, இந்தி தெலுங்கில் ஆடியோ வெளியீட்டிற்கு வருவது வழக்கம். அதற்கும் அவர் வரவில்லை.
'புலி' படத்தை பொருத்தவரை திரு.விஜய் அவர்கள் எங்களுக்கு ஏதாவது லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கால்ஷீட் தந்திருந்தார். ஆனால் 100 நாட்கள் படப்பிடிப்புக்கு பதிலாக 150 நாட்களுக்கு அதிகமாக படப்பிடிப்பு நடத்தி எங்களுக்கு அதிலும் சுமார் 5 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் ஆகிவிட்டது. மே மாதம் படம் வெளியீடு என்று சொல்லி நடத்தப்பட்ட சூட்டிங் கடைசியில் ஜூலை மாதம் வெளியிடலாம் என்றார் இயக்குன்ர் சிம்புதேவன். அடுத்து ஆகஸ்ட் என்றார். அடுத்து செப்டம்பர் 17 கண்டிப்பாக வெளியிடலாம் என்று திரு.விஜய் முதல் அனைவர் முன்னாலும் ஒப்புக்கொண்டார். ஆனால் ,திரும்பவும் அக்டோபர் 1ஆம் தேதிதான் முடியும் என்று தேதியை மாற்றினார். இதனால், இந்தியில், தெலுங்கில் வரவேண்டிய சுமார் 8 கோடி ரூபாய் எங்களுக்கு இழக்க வேண்டி இருந்தது. இதற்கு அடுத்த படியாக வரிவிலக்கு கிடைக்கும் என்று இருந்தோம். அந்த வகையில் சுமார் ரூ.4.5 கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டது. இதையெல்லாம் மீறி படத்தை கஷ்டப்பட்டு வெளியிடலாம் என்று இருந்தபோது வருமான வரித்துறை ரெய்டு வந்து மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளானோம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆகவே எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தையும், நெருக்கடியையும் மனதில் கொண்டு திருமதி.ஸ்ரீதேவி அவர்களிடம் நாங்கள் பேசிய பணத்தை கொடுத்துவிட்டோம் என்று கூறி, எக்ஸ்ட்ராவாக தாங்கள் கேட்ட பணத்தை தரமுடியாத சூழலில் உள்ளோம் என்பதை கனிவாக கூறி, சுமூகமாக எங்கள் பிரச்சனையை முடித்து தருமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com