சுசித்ரா, மடோனாவை தொடர்ந்து ஸ்ரீதேவிக்கும் வந்த சோதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் பல கோலிவுட் நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்ததால் கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் இருந்தது. சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை அடுத்து நடிகை மடோனா உள்பட இன்னும் ஒருசில நடிகர், நடிகைகளின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதால் பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களின் உபயோகத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போனிகபூரின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர், லக்னோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றின் நன்கொடைக்காக தனது கணக்கில் பணம் டெபாசிட் செய்யுங்கள் என ஒருசில திரையுலக பிரபலங்களை கேட்டுக்கொண்டதால் ஹேக் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தற்போது போனிகபுர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது சார்பில் சுனில் கோத்ரா என்பவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com