சென்னையில் சிறப்பு பூஜை: அஜித் பட தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்பாடு!

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

அஜித்தின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வரும் 24ஆம் தேதி சென்னையில் சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் மரணம் அடைந்தார். அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆனதை அடுத்து சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் சிறப்பு பூஜை நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பூஜையில் போனிகபூர், அவருடைய இரண்டு மகள்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. ஸ்ரீதேவியின் குடும்ப நண்பரான அஜித் இந்த பூஜையில் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்