ஸ்ரீதேவி மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் சுவாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்ரீதேவி மரணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவரது மரணம் மர்மமாக இருப்பதாகவும் இதுகுறித்து தீர விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆல்கஹால் கலந்த மதுவகைகளை அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி பதிவு என்ன ஆச்சு என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்ரீதேவி மாரடைப்பால்தான் மரணமடைந்தார் என திடீரென டாக்டர்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குளியல் தொட்டியில் யாரேனும் தள்ளி மூச்சுவிட முடியாதபடி அழுத்தினால் மட்டுமே மரணம் ஏற்படும் என்றும் அவர் தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார். மேலும் பாலிவுட் நடிகைகளுக்கும் தாவூத் இப்ராகிமிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் யோசிக்க வேண்டியிருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout