குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மரணம்: என்ன சொல்கிறது டேட்டா?
- IndiaGlitz, [Tuesday,February 27 2018]
பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் அவர் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்ததால் உயிர் பிரிந்ததாக தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன
இந்த நிலையில் குளியல் தொட்டியில் விழுந்து உயிர் விடுவது குறித்த டேட்டா ஒன்று வெளிவந்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் சுமார் 19000 பேர் வரை குளியல் அறையில் பல்வேறு காரணங்களுக்காக உயிரை விட்டுள்ளனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் குளியல் தொட்டியில் மரணம் அடைவது 70% அதிகரித்துள்ளதாகவும் ஒரு டேட்டா கூறுகிறது. இவர்களில் 10க்கு 9 பேர் 65 வயதை தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் இந்த நிலையில் அமெரிக்காவிலும் குளியல் தொட்டியில் மரணம் சம்பவிக்கும் செயல்களும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு டேட்டாவின்படி வருடம் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் குளியல் அறையில் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஸ்ரீதேவியை பொருத்தவரை அவர் ஒரு வலிமையான உடலமைப்பை கொண்டவர் என்றும், அவர் தள்ளாடி குளியல் தொட்டியில் விழுந்து மரணிக்கும் அளவுக்கும் பலவீனமானவர் இல்லை என்றும் ஸ்ரீதேவி நடித்த பல படங்களுக்கு நடனப்பயிற்சி அமைத்த சரோஜ்கான் கூறியுள்ளார். துபாய் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.