பிறந்து 20 நாள் தான்.. க்யூட் குழந்தையுடன் போட்டோஷூட் எடுத்த நடிகை ஸ்ரீதேவி அசோக்..!
- IndiaGlitz, [Sunday,June 16 2024]
சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் அவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையுடன் அவர் எடுத்துள்ள க்யூட் போட்டோஷூட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.
‘செல்லமடி நீ எனக்கு’ ’கஸ்தூரி’ ’இளவரசி’ ’தங்கம் ’உள்பட பல சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் அசோக் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இந்த தம்பதிக்கு உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீதேவி அசோக் கர்ப்பமான நிலையில் கடந்த மே மாதம் 27ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை ஸ்ரீதேவி அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் குழந்தை பிறந்து 20 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அந்த குழந்தையுடன் எடுத்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவி அசோக் பகிர்ந்துள்ளார்.
இந்த குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் பார்த்தபோது தனக்கு ஆனந்த கண்ணீர் வந்ததாகவும், அடுத்தடுத்த நாட்களில் குழந்தையை பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் புதிதாக இருப்பதாகவும், குறிப்பாக குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது அவ்வளவு அழகாக இருப்பதாகவும், அதை நாங்கள் ரசிக்கிறோம் என்றும் கேப்ஷனாக ஸ்ரீதேவி அசோக் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு மற்றும் கியூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஏராளமான லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.