'சூரரை போற்று' ஓடிடி ரிலீஸ் குறித்து விஜய் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’சூரரை போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக சூர்யா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதே நேரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமும் விஜய் நடித்த மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமுமான தேனாண்டாள் பிலிம்ஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகர் சூர்யா நடித்துள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளி வருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரண சூழ்நிலையில் இது விஷயமாக யார் யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது.
இதில் திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை குறித்தும் பட வெளியீட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் ஆன்லைன் டிக்கெட்டிங் மற்றும் விபிஎஃப் குறித்தும் நிரந்தர தீர்வுகாண திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட முத்தரப்பினரும் அமர்ந்து பேசி எல்லோருடைய கருத்தையும் அறிந்து சுமூகமான நல்ல முடிவினை எடுத்து, அதை நடைமுறைக்கு கொண்டு வந்து செயல்படுத்தி, திரை உலகம் செழிக்க திரையரங்கு உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments