ரெட்லைட் ஏரியாவுக்காக குரல் கொடுத்த ஸ்ரீரெட்டி

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. அவரது ஸ்ரீலீக்ஸ் பட்டியலில் அடுத்து சிக்க போவது யார்? என்பதை நினைத்து தெலுங்கு திரையுலகமே கதிகலங்கி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி, ரெட்லைட் ஏரியாவுக்காக குரல் கொடுத்துள்ளார். பலர் தங்களுடைய வாழ்க்கையில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்களாக இருப்பதாகவும், அவர்களை திருப்தி செய்யும் வகையில் ரெட்லைட் ஏரியாவை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு ஏற்பாடு செய்தால் ஆசிபா போன்ற பெண் குழந்தைகளுக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டம் இயற்றப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீரெட்டியின் ஆலோசனையை அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்