ஸ்ரீரெட்டியின் அநாகரீகமான பதிவால் டோலிவுட் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு பிரபல நட்சத்திரங்கள் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக புகார் கூறி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'நான் ஈ' புகழ் நானி மீதும் பாலியல் புகார் கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு நானி கடந்த சில நாட்களாக பதில் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில் தற்போது ஆங்கில தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாதது என்றும், அவர் கருத்தை யாரும் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை என்றும் கூறினார்.

நானியின் இந்த பேட்டி அந்த நாளிதழில் வெளிவந்த சில மணி நேரத்தில் நடிகை ஸ்ரீரெட்டி அநாகரீகமான ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் டோலிவுட் திரையூலகம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று முதல் தெலுங்கில் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியை நானி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியும் ஒரு பங்கேற்பாளராக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நானியின் அழுத்தம் காரணமாக தொலைக்காட்சி நிர்வாகம் ஸ்ரீரெட்டியை இந்த நிகழ்ச்ச்யில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.;